திருச்சி விமான நிலையத்தில் 2½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது


திருச்சி விமான நிலையத்தில் 2½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 12:53 AM IST (Updated: 1 May 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் 2½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செம்பட்டு, 
துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிறப்பு விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 பயணிகளை தனியாக அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ஆரோன் பாஷா மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த சிவா ஆகிய 2 பயணிகள் தங்கள் உடல் மற்றும் உள்ளாடைகளில் 2 கிலோ 550 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

Next Story