மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடிய சகோதரிகள் கைது + "||" + Sisters arrested for stealing money from a woman on a moving bus

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடிய சகோதரிகள் கைது

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடிய சகோதரிகள் கைது
நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடிய அக்காள், தங்கையை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, மே:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் வசந்தா (வயது 45). இவர் நேற்று முன்தினம் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து, நெல்லை சந்திப்புக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அந்த பஸ், வண்ணார்பேட்டையை கடந்து சென்றபோது, பஸ்சில் இருந்த 2 பெண்கள், வசந்தா வைத்திருந்த கைப்பையில் இருந்த பணத்தை நைசாக திருடிக் கொண்டு, பஸ்சில் இருந்து இறங்க முயன்றனர்.
இதனைப் பார்த்த சக பயணிகள், அந்த பெண்களை கையும் களவுமாக பிடித்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துமாரி (வயது 22), அவருடைய தங்கை மீனாட்சி (20) என்பதும், அவர்கள் வசந்தாவிடம் இருந்த பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து முத்துமாரி, மீனாட்சி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.