மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை + "||" + icu beds for corona patients

பெங்களூருவில் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை

பெங்களூருவில் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை
பெங்களூருவில் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தேவையான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் பெங்களூருவில் 8 மண்டலங்களில் 500 ஐ.சி.யு. படுக்கைகள் வீதம் மொத்தம் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள கர்நாடக செய்தி-மக்கள் தொடர்புத்துறை கமிஷனர் ஹர்ஷா, கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.