தனியார் பள்ளியில் திருடிய 3 பேர் கைது


தனியார் பள்ளியில் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 1:24 AM IST (Updated: 1 May 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் தனியார் பள்ளியில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி, மே:
புளியங்குடி டி.என்.புதுக்குடி பாம்புக்கோவில் சந்தை ரோட்டில் தனியார் நர்சரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருந்த இரும்புக்கதவுகள் மற்றும் கம்பிகள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டி.என்.புதுக்குடியை சேர்ந்த அமல்ராஜ் (வயது 27), கருப்பசாமி (33) மற்றும் விபின்குமார் (29) ஆகிய 3 பேர் சேர்ந்து இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story