சூதாடியவர்கள் கைது


சூதாடியவர்கள் கைது
x
தினத்தந்தி 1 May 2021 1:28 AM IST (Updated: 1 May 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

சூதாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்

மதுரை
சிலைமான் பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் வில்லியம்ஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டபோது கையும், களவுமாக போலீசாரிடம் பிடிபட்டனர். இதில் ராம்தேவ், ராகேஷ்குமார், வினோத், சுவில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்கள் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.64,330-ஐ பறிமுதல் செய்தனர்.

Next Story