புளியங்குடி அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள்


புளியங்குடி அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள்
x
தினத்தந்தி 1 May 2021 1:29 AM IST (Updated: 1 May 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

புளியங்குடி, மே:
புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அங்கு ஒரு சிறுத்தை தனது குட்டியுடன் சென்றதை பார்த்ததாக புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனச்சரகர் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் தலைவன்கோட்டை கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சிறுத்தை தனது குட்டியுடன் சென்றதாக கூறப்படும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சில இடங்களில் சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அங்குள்ள மரங்களில் தானியங்கி கேமராக்களை நேற்று பொருத்தினர். மேலும் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story