தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
அரிமளம்
அரிமளம் பேரூராட்சி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் நின்று கொண்டிருந்த தன்னை அதே பகுதியை சேர்ந்த செல்வா (21), தமிழ்ச்செல்வன் (21) ராமகிருஷ்ணன் (19) ஆகிய 3 பேர் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்பேரில் திருமயம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story