மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது + "||" + Valipar arrested

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
ஆலங்குடி
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு வடக்குப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் ராம்கி (வயது 29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பெண்ணை காதலித்து வந்தார். திருமண செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுக்கு ராம்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்தநிலையில் காதலன் வீட்டுக்கு சென்ற அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராம்கியிடம் கேட்டார். ஆனால் திருமணம் செய்துகொள்ள மறுத்த ராம்கி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அப்பெண்ணை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா விசாரணை நடத்தி ராம்கி மற்றும் அவரது தந்தை சந்திரபாபு, தாய் ராணி, தங்கை ராஜேஸ்வரி (26), அண்ணன் ராஜேஷ் (45) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
2. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பாளையங்கோட்டையில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
5. சங்கராபுரம் அருகே பெண் கேட்டு தகராறு வாலிபர் கைது
சங்கராபுரம் அருகே பெண் கேட்டு தகராறு வாலிபர் கைது