பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.
இடிகரை,
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், ஜெய்கார்த்திக், முருகன், திவாகர் உள்ளிட்டவர்கள் திரண்டு வந்தனர்.
அவர்கள், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு நின்று பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிராமத்தில் வசிக்கும் குறவர் இனத்தை சேர்ந்த சிலர் மதம்மாறி உள்ளனர்.
அவர்கள், சாமி சிலைகளை கடலில் போட்டுள்ளனர். மேலும் அந்த தெய்வங்கள் குறித்து அவதூறாக பேசிய ஆடியோ வெளியாக உள்ளது. இது எங்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
எனவே சாமி சிலைகளை மீட்க வேண்டும். அவற்றை கடலில் வீசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story