மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் கிருமிநாசினி தெளிக்கும் குட்டி விமானம் + "||" + sanitized from drone

பெங்களூருவில் கிருமிநாசினி தெளிக்கும் குட்டி விமானம்

பெங்களூருவில் கிருமிநாசினி தெளிக்கும் குட்டி விமானம்
பெங்களூருவில் கிருமிநாசினி தெளிக்கும் குட்டி விமானம்
பெங்களூரு: ஒரு தனியார் நிறுவனம் கிருமிநாசினி தெளிக்கும் பறக்கும் குட்டி விமானத்தை (ட்ரோன்) தயாரித்துள்ளது. அந்த குட்டி விமானத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த குட்டி விமானத்தை பறக்கவிட்டி அதன் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். 

அந்த குட்டி விமானம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்கிறது. அத்துடன் 35 கிலோ எடையுள்ள மருந்து பொருட்களை கொண்டு குறிப்பிட்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கும் பணியை மேற்கொள்ளும் திறனும் உள்ளது. அந்த குட்டி விமானம் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. அந்த குட்டி விமானத்தை தயாரித்த நிறுவனத்தை எடியூரப்பா பாராட்டினார்.