வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது


வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 2:02 AM IST (Updated: 1 May 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 33). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திலகர் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. திலகர், அவரது நண்பர்கள் விமல் என்ற புல்லட் மற்றும் சிராம் ஆகியோர் சேர்ந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பிரசாந்த் மனைவி சந்தியா(31) கொடுத்த புகாரின்பேரில் திலகர், விமல் மற்றும் சிராம் ஆகிய 3 பேர் மீது மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story