ஈரோடு மாவட்டத்தில் 2 மையங்களில் 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது; ஏற்பாடுகள் தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
128 வேட்பாளர்கள்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) என 8 தொகுதிகளிலும் மொத்தம் 128 பேர் போட்டியிட்டனர்.
ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 பேர் போட்டியில் இருந்தனர்.
அவர்கள் விவரம் வருமாறு:-
1. எம்.யுவராஜா (அ.தி.மு.க.- த.மா.கா.)
2. திருமகன் ஈவேரா (காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி)
3.செ.கோவிந்தராஜ் (பகுஜன்சமாஜ் கட்சி)
4.ஆறுமுகா ஏசி கண்ணன் (அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா)
5.ச.கோமதி (நாம் தமிழர் கட்சி)
6.சு.சண்முகவேல் (எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி)
7.சா.ஆ.முத்துக்குமரன் (அ.ம.மு.க.)
8.ப.ராஜா (மக்கள் திலகம் முன்னேற்ற கழகம்)
9.ஏ.எம்.ஆர்.ராஜாகுமார் (மக்கள் நீதி மய்யம்)
10.எல்.அந்தோணி பீட்டர் (சுயே.)
11.ஆர்.மின்னல் முருகேஷ் (சுயே.)
12.வெ.மீனாட்சி (சுயே.)
13.மு.யுவராஜ் (சுயே.)
14.இ.ஷாஜகான் (சுயே.)
மேற்கண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதியில் 15 பேர் போட்டியிட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. கே.வி.ராமலிங்கம் (அ.தி.மு.க.)
2.சு.முத்துசாமி (தி.மு.க.)
3.அ.தனலட்சுமி (பகுஜன் சமாஜ் கட்சி)
4.ப.சந்திரகுமார் (நாம் தமிழர் கட்சி)
5.மு.சந்திரன் (அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா)
6.எஸ்.சிவசுப்பிரமணியன் (அ.ம.மு.க.)
7.கோ.தங்கவேல் (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்ட்டி)
8.துரைசேவுகன் (மக்கள் நீதி மய்யம்)
9.கு.பாலசுப்பிரமணியம் (இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி)
10.கு.மாதன் (கணசங்கம் பார்ட்டி ஆப் இந்தியா)
11.ஆர்.அய்யாவு (சுயே.)
12.ஆர்.காளிதாஸ் (சுயே.)
13.ஆ.முத்துசாமி (சுயே.)
14.ம.விமலா (சுயே.)
15.அ.வெங்கடேசன் (சுயே.)
மேற்கண்டவர்கள் போட்டியிட்டனர்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 15 பேர் போட்டியிட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.சி.சரஸ்வதி (பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி)
2.சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க.)
3.ரா.பூபதி (பகுஜன் சமாஜ் கட்சி)
4.டி.தங்கராஜ் (அ.ம.மு.க.)
5.கோ.பிரகாஷ் (நாம் தமிழர் கட்சி)
6.ஏ.மகேஸ்வரன் (மை இந்தியா பார்ட்டி)
7.பி.மணி (இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி)
8.ரா.மாணிக்கம் (இந்திய கண சங்கம் கட்சி)
9.மு.ரமேஷ் (நமது கொங்கு முன்னேற்றக்கழகம்)
10.ம.ராஜேஷ்குமார் (மக்கள் நீதி மய்யம்)
11.கு.சோ.கோவணம் தங்கவேல் (சுயே.)
12.சாமிகந்தசாமி (சுயே.)
13.எல்.பாரதி (சுயே.)
14.ப.மயில்சாமி (சுயே.)
15.விஜயகுமார் (சுயே.)
மேற்கண்டவர்கள் போட்டியிட்டனர்.
பெருந்துறை
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 25 பேர் போட்டியிட்டனர் அவர்கள் விவரம் வருமாறு:-
1.எஸ்.ஜெயக்குமார் (அ.தி.மு.க.)
2.கே.கே.சி.பாலு (தி.மு.க.-கொ.ம.தே.க.)
3.பி.ஆர்.குழந்தைவேல் (தே.மு.தி.க.)
4. எம்.தம்பி (பகுஜன் சமாஜ் கட்சி)
5.கே.எஸ்.தட்சிணாமூர்த்தி (தேசிய மக்கள் சக்தி கட்சி)
6.சி.லோகநாதன் (நாம் தமிழர் கட்சி)
7.சி.கே.நந்தகுமார் (மக்கள் நீதி மய்யம்)
8.த.பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்)
9.எம்.ரமேஷ் (நமது கொங்கு முன்னேற்ற கழகம்)
10.ப.வேலுச்சாமி (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்)
11.தோப்பு என்.டி.வெங்கடாசலம் (சுயே.)
12.ம.கார்த்தி (சுயே.)
13.சு.கிருஷ்ணன் (சுயே.)
14.சங்கர்சாமி (சுயே.)
15.ந.சதிஸ்குமார் (சுயே.)
16.ஜே.கோபாலகிருஷ்ணன் (சுயே.)
17.க.சம்பத்குமார் (சுயே.)
18.எஸ்.ஆர்.தேவேந்திரமாணிக்கம் (சுயே.)
19.வி.எம்.பாலசுப்ரமணி (சுயே.)
20.எம்.பாலமுருகன் (சுயே.)
21.மு.மயில்சாமி (சுயே.)
22.கே.வெங்கடாச்சலம் (சுயே.)
23.பி.ஆர்.வெங்கடாசலம் (சுயே.)
24.நா.ஜீவா (சுயே.)
25.பி.ஜோதிமுருகன் (சுயே.)
மேற்கண்டவர்கள் போட்டியிட்டனர்.
பவானி
பவானி சட்டமன்ற தொகுதியில் 14 பேர் போட்டியிட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.கே.சி.கருப்பணன் (அ.தி.மு.க.)
2.கே.பி.துரைராஜ் (தி.மு.க.)
3.எம்.கோபால் (பகுஜன்சமாஜ் கட்சி)
4.கே.அம்மாசை (கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி)
5.கி.சதானந்தம் (மக்கள் நீதி மய்யம்)
6.மு.சத்யா (நாம்தமிழர் கட்சி)
7.எம்.ராதாகிருஷ்ணன் (அ.ம.மு.க.)
8.ஆர்.பி.ஜனார்த்தனம் (தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி)
9.ஏ.அப்துல்காதர் (சுயே.)
10.டி.கே.அப்புச்சி (சுயே.)
11.பி.கார்த்திக்கேயன் (சுயே.)
12.பி.சதீஸ்குமார் (சுயே.)
13.வி.எம்.பெருமாள் (சுயே.)
14.ஜி.ஸ்டான்லி (சுயே.)
மேற்கண்டவர்கள் போட்டியிட்டனர்.
அந்தியூர்
அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 20 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-
1.கே.எஸ்.சண்முகவேல் (அ.தி.மு.க.).
2.ஏ.ஜி.வெங்கடாசலம் (தி.மு.க.)
3.கு.பாட்டன் (பகுஜன் சமாஜ் கட்சி)
4.மு.குருநாதன் (மக்கள் நீதி மய்யம்)
5.மா.சரவணன் (நாம் தமிழர் கட்சி)
6.எஸ்.ஆர்.செல்வம் (அ.ம.மு.க.)
7.எம்.பாக்கியம் (இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி)
8.அ.பிரதாபன் (அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி)
9.கே.ராஜேந்திரன் (இந்திய கண சங்கம் கட்சி)
10.கோ.அன்பழகன் (சுயே.)
11.ரா.கார்த்திக்கேயன் (சுயே.)
12.எம்.கீதா (சுயே.)
13.ரா.குமாரசாமி (சுயே.)
14.கு.சண்முகம் (சுயே.)
15.எம்.ஆர்.செங்குட்டுவன் (சுயே.)
16.மு.தங்கவேல் (சுயே.)
17.செ.பூரணசந்திரன் (சுயே.)
18.தா.பெரியசாமி (சுயே.)
19.மு.முத்துச்சாமி (சுயே.)
20.அ.மா.ஷேக்தாவூத் (சுயே.)
மேற்கண்டவர்கள் போட்டியிட்டனர்.
கோபி
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 19 பேர் போட்டியிட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)
2.ஜி.வி.மணிமாறன் (தி.மு.க.)
3.பி.பழனிச்சாமி (பகுஜன் சமாஜ் கட்சி)
4.கு.சக்திவேல் (இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி)
5.மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி)
6.நா.க.துளசிமணி (அ.ம.மு.க.)
7.என்.கே.பிரகாஷ் (மக்கள் நீதி மய்யம்)
8.த.குமார் (சுயே.)
9.கு.அ.சங்கர்குமார் (சுயே.)
10.எஸ்.செல்வக்குமார் (சுயே.)
11.கே.தனபால் (சுயே.)
12.நா.தேவராஜ் (சுயே.)
13.மா.பழனிசாமிராஜ் (சுயே.)
14.ஏ.என்.பூபதிராஜா (சுயே.)
15.பா.முத்துமணி (சுயே.)
16.கே.மோகன்ராஜ் (சுயே.)
17.ர.ராக்கிமுத்து ரங்கநாடார் (சுயே.)
18.மு.ஜுனாயத் (சுயே.)
19.ஆர்.ஸ்ரீதேவி (சுயே.)
மேற்கண்டவர்கள் போட்டியிட்டனர்.
பவானிசாகர்
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 6 பேர் போட்டியிட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.ஏ.பண்ணாரி (அ.தி.மு.க.)
2.பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி-தி.மு.க. கூட்டணி)
3.ஜி.ரமேஷ் (தே.மு.தி.க.)
4.கோ.சக்திவேல் (பகுஜன்சமாஜ் கட்சி)
5.கா.கார்த்திக்குமார் (மக்கள் நீதி மய்யம்)
6.வெ.சங்கீதா (நாம் தமிழர் கட்சி)
மேற்கண்டவர்கள் போட்டியிட்டனர்.
76.91 சதவீதம்
இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் சேர்த்து 128 பேர் போட்டியில் உள்ளனர். மொத்தம் 951 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது.
7 லட்சத்து 51 ஆயிரத்து 766 ஆண்களும், 7 லட்சத்து 57 ஆயிரத்து 88 பெண்களும், இதர பாலினத்தவர்கள் 38 பேரும் இந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளில் நேரடியாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இது 76.91 சதவீதமாகும். இதுதவிர அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குகளும் பதிவு செய்து உள்ளனர்.
2 மையங்களில் எண்ணிக்கை
வாக்குப்பதிவுக்கு பின்னர் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. கோபி மற்றும் பவானிசாகர் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபி கலை அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த 2 மையங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணும் பணிகள் தொடங்கும். அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்து வாக்குகள் எண்ணப்படும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை மற்றும் சட்டமன்ற தெகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story