மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிக்கை பணி செய்யும் அதிகாரிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு; தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது + "||" + vote counting center

வாக்கு எண்ணிக்கை பணி செய்யும் அதிகாரிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு; தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது

வாக்கு எண்ணிக்கை பணி செய்யும் அதிகாரிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு; தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது
ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணி செய்யும் அதிகாரிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணி செய்யும் அதிகாரிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை 
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படுகின்றன. முன்னதாக நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அவரவர் பணி செய்யும் தொகுதி எது என்பதை உறுதி செய்யும் ஒதுக்கீடு பணி நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.
தொகுதி ஒதுக்கீடு
தேர்தல் பார்வையாளர்கள் அடோனுசாட்டர்ஜி, மனிஷ் அகர்வால், பிரசாந்த் குமார் மிஸ்ரா, நர்பு வாங்டி பூட்டியா, கே.அன்னபூரணி, ஆர்.சில்பா ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடந்தது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கணினி சுழற்சி முறையில் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், பயிற்சி உதவி கலெக்டர் ஏக்கம் ஜேசிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி (பொது), ஈஸ்வரன் (கணக்குகள்), கருப்புசாமி (தேர்தல்) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 2 மையங்களில் 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது; ஏற்பாடுகள் தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
2. வாக்கு எண்ணிக்கை முடிவை கட்சியினர் அறிந்து கொள்ள சித்தோடு போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் ஒலிபெருக்கி பொருத்தும் பணி தீவிரம்
வாக்கு எண்ணிக்கை முடிவை கட்சியினர் அறிந்து கொள்ள சித்தோடு போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் ஒலிபெருக்கி பொருத்தும் பணி தீவிரம்
3. சித்தோடு ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் தடைபட்டதால் பரபரப்பு
சித்தோடு ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
5. தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன.

அதிகம் வாசிக்கப்பட்டவை