மாவட்ட செய்திகள்

கோபி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி + "||" + Death by electric shock

கோபி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

கோபி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
கோபி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
கடத்தூர்
கோபி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
எலக்ட்ரீசியன்
கோபி அருகே உள்ள காளசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சேகர். அவருடைய மகன் கவிமணி செல்வன் (வயது 22). அதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர்கள் செம்பான் மகன் பிரகதீஸ்வரன் (19). வெள்ளியங்கிரி மகன் ஸ்ரீதர் (23). இவர்கள் 3 பேரும் எலக்ட்ரீசியன்கள் ஆவர்.
இந்த நிலையில் கவிமணி செல்வனும், பிரகதீஸ்வரனும், ஸ்ரீதரும் நேற்று ஒத்தக்குதிரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கல்லூரிக்கு வெளியே பெரிய ஏணியை தள்ளிக்கொண்டு சென்றனர்.
மின்சாரம் தாக்கி சாவு
இதில் மேலே சென்ற மின்சார கம்பி மீது ஏணி பட்டு உரசியது. இதனால் 3 பேரும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கவிமணி செல்வன் நேற்று பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மாபேட்டை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு; கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்
அம்மாபேட்டை அருகே கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
2. ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
3. ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி அரசு ஊழியர் பலி
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை