வீட்டில் பொருட்களை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு
வீட்டில் பொருட்களை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மனைவி முத்துலட்சுமி (வயது 40). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சின்னராஜ் (30). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சின்னராஜை போலீசார் தேடி அவரது வீட்டிற்கு வருவார்கள். தான் வீட்டில் இருப்பதை முத்துலட்சுமி தான் போலீசுக்கு சொல்வதாக சின்னராஜ் கருதினார். கடந்த 12-ந் தேதி சின்னராஜ், அவரது குடும்பத்தினர் முத்துலட்சுமியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து முத்துலட்சுமி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் அவரது உறவினர்களான பொன்னுத்துரை, ராஜதுரை உள்பட 5 பேர் சம்பவத்தன்று முத்துலட்சுமி, அவரது மகளை அவதூறாக பேசி, அங்கு இருந்த நாயை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார், சின்னராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story