திருவண்ணாமலை; நீரேற்றும் நிலையம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா


திருவண்ணாமலை; நீரேற்றும் நிலையம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 1 May 2021 6:06 PM IST (Updated: 1 May 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகராட்சி நீரேற்றும் நிலையம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு சேஷாத்திரி ஆசிரமம் பின்புறம் உள்ள பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை-செங்கம் சாலை அருகில் உள்ள நகராட்சி நீரேற்று நிலையம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த சமபவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story