கொரோனாவுக்கு எதிராக போராட தேசியவாத காங்கிரஸ் ரூ.2 கோடி நிதி உதவி
கொரோனாவுக்கு எதிராக போராட மாநில அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் ரூ.2 கோடி நிதி அளித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்காக காங்கிரஸ் கட்சி நிதி உதவி அளிப்பதாக அறிவித்து இருந்தது. இதில் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கொரோனாவுக்கு எதிராக போராட மாநில அரசுக்கு ரூ.2 கோடி நிதி வழங்கி உள்ளது.
இதற்கான காசோலையை நேற்று துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலோ எம்.பி. உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வர்ஷா பங்களாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்தனர்.
நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.1 கோடி தேசியவாத காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்தும், மற்றொரு ரூ.1 கோடி அந்த கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களின் ஒருமாத சம்பளத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story