மது விற்ற 35 பேர் கைது


மது விற்ற 35 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 7:44 PM IST (Updated: 1 May 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 19 போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 35 பேர் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து தூத்துக்குடி போலீசார், 35 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 467 மதுபாட்டில்களும், ரூ.5 ஆயிரத்து 750-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story