மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு பண்ணையில் 1¼ லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயார்


மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு பண்ணையில் 1¼ லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயார்
x
தினத்தந்தி 1 May 2021 10:52 PM IST (Updated: 1 May 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு தோட்டக் கலை பண்ணையில் 1¼ லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு தோட்டக் கலை  பண்ணையில் 1¼ லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கல்லாறு அரசு பண்ணை

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது. மித வெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட பகுதியில் பழப்பண்ணை அமைந்திருப்பதால் பல வகையான பழ மரங்கள், 

வாசனை திரவிய பயிர்கள் அலங்கார செடிகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாக்கு, ஜாதிக்காய், மிளகு, சில்வர் ஓக் உள்ளிட்ட மரங்கின் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


1¼ லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயார்

இதுகுறித்து கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் ஹரிபாஸ்கர் கூறியதாவது:- கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் 90 ஆயிரம் மொகித் நகர் பாக்கு நாற்றுகள், 10 ஆயிரம் அலங்கார செடி நாற்றுகள், 10 ஆயிரம் மிளகு நாற்றுகள், 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள் என 1 லட்சத்து 30 ஆயிரம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. 

பாக்கு மர நாற்று ஒன்று ரூ.18-க்கும், அலங்கார செடிகள் நாற்று ஒன்று ரூ.10-ல் இருந்து ரூ.30 வரையும், மிளகு செடி, சில்வர் ஓக் மர நாற்று ஒன்று ரூ.6-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நாற்றுகள் விற்பனை மே மாதம் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story