மாவட்ட செய்திகள்

தியாகதுருகம் அருகேவிவசாயியை தாக்கிய அண்ணன் கைது + "||" + Near Sacrifice Brother arrested for assaulting farmer

தியாகதுருகம் அருகேவிவசாயியை தாக்கிய அண்ணன் கைது

தியாகதுருகம் அருகேவிவசாயியை தாக்கிய அண்ணன் கைது
தியாகதுருகம் அருகே விவசாயியை தாக்கிய அண்ணன் கைது
கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சூ.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் அருணாசலம்(வயது 39). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது நிலத்தில் உள்ள மின் மோட்டார் மூலம் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.  இதையறிந்து அவரது அண்ணன் முருகேசன்(49), இவரது மனைவி ஜோதி ஆகியோர் அங்கு வந்து அருணாசலத்திடம் பொது கிணற்றில் ஆளுக்கு ஒரு நாள் தான் தண்ணீர் பாய்க்க வேண்டும் என்று கூறி தகராறு செய்து அவரை கொடுவாளால் தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அருணாசலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் அருணாசலம் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நகை-பணத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவியை கொன்ற அண்ணன் கைது
நகை-பணத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரி மாணவியை கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.