திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது


திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 11:04 PM IST (Updated: 1 May 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது



திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை மேட்டுச்சேரி கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டுகள் வெங்கடேசன் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் மேட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(வயது 40) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது 50 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஏழுமலையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story