92 வயது மூதாட்டியை கொன்று நகைகளை பறித்தது கள்ளக்காதல் ஜோடி


92 வயது மூதாட்டியை கொன்று நகைகளை பறித்தது கள்ளக்காதல் ஜோடி
x
தினத்தந்தி 1 May 2021 11:34 PM IST (Updated: 1 May 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

92 வயது மூதாட்டியை கொன்று நகைகளை பறித்தது கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது.

பரமக்குடி,

92 வயது மூதாட்டியை கொன்று நகைகளை பறித்தது கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது.

மூதாட்டி கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். அவருடைய மனைவி காளிமுத்தம்மாள் (வயது 92). இவர் ஊரின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் பம்புசெட் அறையில் கொலை செய்யப்பட்டு கி்டந்தார்.
அவரது கை, காதுகளில் அணிந்திருந்த தங்க நகைகள் ெகாள்ளை போய் இருந்தன.
இதுகுறித்து அவரது மகன் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கள்ளக்காதல் ஜோடி

 கொலை செய்யப்பட்ட காளிமுத்தம்மாளின் தோப்பில் முத்துராக்கு (27) என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் சத்திரக்குடி அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் வடிவேல் அடிக்கடி முத்துராக்குவை பார்ப்பதற்கு தோப்பிற்கு வந்துள்ளார். அவர்கள் நெருக்கமாக இருந்ததை மூதாட்டி காளிமுத்தம்மாள் பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே இருவரையும் கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வடிவேல், காளிமுத்தம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி சம்பவத்தன்று தோப்பில் தனியாக இருந்த காளிமுத்தம்மாளை தாக்கி, காதில் அணிந்திருந்த 6 பவுன் தண்டட்டி கையில் அணிந்திருந்த 6 பவுன் வளையல் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அதற்கு உடந்தையாக முத்துராக்கு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கங்காதேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story