முகவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா


முகவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 May 2021 11:39 PM IST (Updated: 1 May 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் முகவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு செல்வதற்கு பரிசோதனை செய்து அதன் நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்.இதில் திருப்பத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கம்பனூரை சேர்ந்த ஒருவருக்கும், எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் மல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


Next Story