வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு


வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 1 May 2021 6:33 PM GMT (Updated: 1 May 2021 6:33 PM GMT)

4 சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகள் இன்று தெரிய வரும். இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

காரைக்குடி,

4 சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகள் இன்று தெரிய வரும். இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாகனங்கள் எதுவும் கல்லூரிக்கு நுழையாமல் இருப்பதற்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தயார் நிலையில்

 வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு ரவுண்டு இறுதியில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே இருப்பவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே ஒலி பெருக்கி மற்றும் ரேடிேயா வைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளே மீடியா சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் தபால் ஓட்டுகள் பிரித்து வைக்க பயன்படுத்தப்படும் பெட்டி மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் அமரும் வகையில் இருக்கைகள், மேஜைகள் வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தீவிர சோதனை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றிலும் சிவகங்கை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் ஜூலி மூலம் தீவிரமாக சோதனை நடத்தினர். இதேபோல் சிவகங்கை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று தயார் நிலையில் உள்ளது.
இங்கு வரும் அரசியல் முகவர்கள், அரசு அலுவலர்கள் வரிசையாக உள்ளே செல்லும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

Next Story