வெள்ளியணை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


வெள்ளியணை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 2 May 2021 12:06 AM IST (Updated: 2 May 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளியணை 
வீணாகும் குடிநீர்
கரூர் மாவட்டம் கட்டளை பகுதியில் காவிரி ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் உப்பிடமங்கலம், ஜெகதாபி, வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. 
இந்த குடிநீர் குழாயில் வெள்ளியணை ஜெகதாபி ரோட்டில் திருமலைநாதன்பட்டி தனியார் கல்லூரி அருகே உடைப்பு ஏற்பட்டு அதிகப்படியான நீர் வெளியேறி வீணாகி வருகிறது. இப்படி வெளியேறி தேங்கி நிற்கும் நீரில் அப்பகுதி மக்கள் துணிகளை துவைத்தும், ஆடு மாடுகளை குளிப்பாட்டியும் வருகின்றனர். 
பொதுமக்கள் கோரிக்கை 
இதனால் நீர் அசுத்தமாகி குடிநீர் செல்லும் குழாய் நீரில் கலந்து அந்த நீரை குடிக்க பயன்படுத்தும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும் கோடைகாலத்தில் வேடசந்தூர் பகுதியில் உள்ள மக்களுக்கு சீரான குடிநீர் தொடர்ந்து கிடைக்க இப்படி வீணாகும் நீரால் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சரி செய்து சீரான முறையில் நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story