மின்சாரம் பாய்ந்து பெண் சாவு


மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
x

கொட்டாரம் அருகே பிரிட்ஜை சுத்தம் செய்த போது, மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில்:
கொட்டாரம் அருகே பிரிட்ஜை சுத்தம் செய்த போது, மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மின்சாரம் பாய்ந்தது
கொட்டாரம் அருகே உள்ள நரிக்குளம் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ஏசுவடியாள் (வயது55). ஆறுமுகம் இறந்து விட்டதால் அதே ஊரில் உள்ள தம்பி வீட்டில் ஏசுவடியாள் வசித்து வந்தார். இவர் பசுமாடுகளை வைத்து பால் விற்பனை செய்தார். 
இந்த நிலையில் ஏசுவடியாள் நேற்று காலை 11.30 மணிக்கு தனது வீட்டில் இருந்த பிரிட்ஜை (குளிர்சாதன பெட்டி) சுத்தம் செய்தார். அப்போது பிரிட்ஜின் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்ற சென்றார். அப்போது ஏசுவடியாள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். 
சாவு
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு ஏசுவடியாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
அதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி இறந்த ஏசுவடியாளுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story