மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பலி + "||" + Councilor killed

அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பலி

அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பலி
ராஜபாளையம் அருகே வேன் மோதி முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் பலியானார்.
ராஜபாளையம், 
ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர் முருககணேஷ் (48) என்பவருடன் சென்றுள்ளார். பின்னர் மதுரை தேசிய நெடுஞ்சாலை மாயூரநாதசுவாமி கோவில் எதிரே போகும் போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையத்திற்கு பால் கேன் ஏற்றிவந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். முருககணேஷ் காயம் அடைந்தார். இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் சக்தி ராஜனிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.