அரசு ஊழியர்கள் உள்பட 116 பேருக்கு கொரோனா


அரசு ஊழியர்கள் உள்பட 116 பேருக்கு கொரோனா
x
அரசு ஊழியர்கள் உள்பட 116 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 2 May 2021 12:47 AM IST (Updated: 2 May 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள் உள்பட 116 பேருக்கு கொரோனா

கோவை


கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி.)வைக்கப்பட்டு உள்ளது. 


அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறை உள்பட கல்லூரி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 

 இது தவிர அங்கு பலவேறு அரசியல் கட்சிகளின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அல்லது கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத் துக்கு செல்வோருக்கு (கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் போடாத வர்கள்) கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோத னை செய்யப்பட்டது. அந்த முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் உள்பட 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

எனவே அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனாலும் போதிய அதிகாரிகள் இருப்பதால் வாக்கு எண்ணும் பணியில் தொய்வு ஏற்படாது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story