பண்ருட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது


பண்ருட்டி பகுதியில்  வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 2 May 2021 1:13 AM IST (Updated: 2 May 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

கைது

பண்ருட்டி,

பண்ருட்டி காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 19), சின்ன எலந்தம்பட்டை  சேர்ந்த என்ஜினீயரிங் படித்து வரும் ஜெய்கணேஷ்(21) ஆகியோர் என்பதும், இவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பண்ருட்டி பகுதிக்குட்பட்ட ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த தனகோடி என்ற பெண்ணை வழிமறித்து, அவரிடம் இருந்த 3 கிராம் நகை மற்றும் பண்ருட்டியை சேர்ந்த கலைச்செல்வி என்பவரை வழிமறித்து, அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 கிராம் நகை, ரூ.3500 ரொக்கம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story