மாவட்ட செய்திகள்

கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; வியாபாரி படுகாயம் + "||" + Car-motorcycle collision; Merchant Injury

கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; வியாபாரி படுகாயம்

கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; வியாபாரி படுகாயம்
ஏர்வாடி அருகே கார், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வியாபாரி படுகாயம் அடைந்தார்.
ஏர்வாடி, மே:
நாங்குநேரி அருகே உள்ள தோரணாகுறிச்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துராஜ் (வயது 27). இவர் மசாலா பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார்சைக்கிளில் தோரணாகுறிச்சியில் இருந்து வள்ளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். தளபதிசமுத்திரம் மேலூர் நான்குவழி சாலையில் சென்றபோது எதிரே அந்த வழியாக வந்த கார், அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வள்ளியூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின்பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.