மாவட்ட செய்திகள்

வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் 72 பேருக்கு கொரோனா + "||" + Corona for 72 people in Valliyoor, Radhapuram area

வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் 72 பேருக்கு கொரோனா

வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் 72 பேருக்கு கொரோனா
வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வள்ளியூர், மே:
வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார பகுதிகளில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டாரத்தில் 72 பேர் கொரோனா தொற்று நோய் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 14 பேர், காவல்கிணற்றில் 12 பேர், பழவூர் மற்றும் திசையன்விளையில் தலா 6 பேர், இடையன்குடியில் 5 பேர், வள்ளியூரில் 4 பேர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம் 72 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை