டெல்டாவில் ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தஞ்சை, திருவாரூரில் 2 பேர் பலி


டெல்டாவில் ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தஞ்சை, திருவாரூரில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 May 2021 7:59 PM GMT (Updated: 1 May 2021 7:59 PM GMT)

டெல்டாவில் ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை, திருவாரூரில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்

தஞ்சாவூர்:-

டெல்டாவில் ஒரே நாளில் 949 பேருக்கு கொேரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை, திருவாரூரில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்

கொரோனா தொற்று

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 331 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 22 ஆக உயர்ந்தது. தற்போது 2,322 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண் பலியானார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 306 பேர் பலியாகி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 168 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 408 ஆக உயர்ந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 55 வயது ஆண் பலியானார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 123 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 1,085 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

949 பேர் பாதிப்பு

நாகை மாவட்டத்தில் நேற்று 233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 184 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 655 ஆக உயர்ந்தது. தற்போது 1,693 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. டெல்டாவில் ஒரே நாளில் 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 683 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Next Story