கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 2 May 2021 1:31 AM IST (Updated: 2 May 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாக்குடி அருகே கோவில்களில் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

முக்கூடல், மே:
பாப்பாக்குடி அருகே கபாலிபாறை, செங்குளம், இடைகால் உள்ளிட்ட பகுதிகளில் மெயின் ரோட்டில் உள்ள வன்னாரமாடன் கோவில், பச்சாத்துமாடன் கோவில், புதுக்குளம் சுடலைமாடசாமி உள்ளிட்ட 5 கோவில்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். செங்குளம் பச்சாத்து மாடசாமி கோவிலில் உள்ள உண்டியலை எடுத்து சென்று பணத்தை எடுத்து விட்டு உண்டியலை ஊருக்கு வடக்கே காட்டுப்பகுதியில் முட்புதர்மீது வீசி விட்டு சென்றுள்ளனர். 
மேலும் கபாலிபாறையில் உள்ள கோவிலில் உண்டியலை உடைத்து கொண்டிருக்கும்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசாரை கண்டதும் கொள்ளையர்கள் ஓடி விட்டனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story