மாவட்ட செய்திகள்

சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வு + "||" + Commissioner of Police inspects security arrangements

சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வு

சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வு
சேலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்:
சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரையிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள், வேட்பாளர்களை தவிர மற்ற ஆட்களை உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதேபோல், அம்மாபேட்டை கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது, போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன் மற்றும் உதவி கமிஷனர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.