சேலம் பொன்னம்மாபேட்டையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி மும்முரம் ஆணையாளர் ஆய்வு


சேலம் பொன்னம்மாபேட்டையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி மும்முரம் ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 1 May 2021 8:05 PM GMT (Updated: 1 May 2021 8:05 PM GMT)

சேலம் பொன்னம்மாபேட்டையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3 தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க பட்டுள்ளன. இந்த மையங்களில் 212 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கூடுதலாக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, பொன்னம்மாபேட்டை தில்லை நகரில் உள்ள ஐ.ஐ.எச்.டி. வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் 200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் சண்முக வடிவேல், உதவி பொறியாளர் ஆனந்தி, சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story