மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2021 1:49 AM IST (Updated: 2 May 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செந்துறை:

மோட்டார் சைக்கிள் திருட்டு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது குறித்து அவர் செந்துறை போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் செந்துறை போலீசார், மருவத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில், சந்தேகப்படும்படியாக வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் இளவரசனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதும், அவர்கள் மருதூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரன், துரைப்பாண்டி, மணிகண்டன் மற்றும் சரத்குமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஏற் கனவே திருடிச்சென்ற 3 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
ேமலும் 4 பேரையும் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story