நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை


நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை
x

பூலாம்பாடியில் நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

வேப்பந்தட்டை:

முற்றுகை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்மணிகளை மூட்டைகளாக கொண்டு சென்று விற்பனைக்காக அடுக்கி வைத்து உள்ளனர்.
ஆனால் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள், விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல், வியாபாரிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வசூலை கைவிட வேண்டும்
அப்போது, விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் நெல் மூட்டைக்கு ரூ.40 கூலி என்று கூறி வசூல் செய்வதை கைவிட வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து அங்கு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளின் நெல் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால், விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பர          பரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story