இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன
இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன
கோவை
கொரானாவின் 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நோய் தடுப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சனிக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அதிகமாகி தொற்று பரவலுக்கு காரணமானது. எனவே அந்த கடை களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால் கோவை உக்கடம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனை மீன் அங்காடியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து மீன் வியாபாரிகள் கூறும் போது, கோவையில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.10 லட்சம் அளவுக்கு மீன் வர்த்தகம் நடைபெற்று வந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து தினமும் கோவைக்கு 25 கண்டெய்னர்களில் மீன்கள் விற்ப னைக்கு கொண்டு வரப்படும். விற்பனை அதிகம் இருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடையை மூட உத்தரவிட்டு உள்ளதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.
இதே போல் இறைச்சி அறுவை மனைகள் மற்றும் அனைத்து இறைச்சிக் கடைகளும் நேற்று பூட்டப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story