2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன: சேலம் மாவட்டத்தில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை


2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன: சேலம் மாவட்டத்தில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 2 May 2021 2:03 AM IST (Updated: 2 May 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.12 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

சேலம்:
2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.12 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மதுக்கடைகள் மூடப்பட்டன
தமிழகத்தில் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி நேற்றும், வாக்கு எண்ணிக்கையையொட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதையொட்டி நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 2 நாட்கள் கடைகள் மூடப்படும் என்பதால் மதுபிரியர்கள் கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். 
இதனால் நேற்று முன்தினம் கடை திறந்தது முதலே கூட்டம் அதிமாக காணப்பட்டது. இருந்தாலும் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று தாங்கள் விரும்பிய மதுபாட்டில்களை வாங்கினர்.
ரூ.12 கோடிக்கு விற்பனை
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, ‘2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலியாக நேற்று முன்தினம் மதுபாட்டில்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டன. வழக்கமாக மாவட்டத்தில் தினமும் ரூ.5 முதல் ரூ.6 கோடி வரை மது  விற்பனை நடைபெறும். ஆனால் நேற்று முன்தினம் மட்டும் ரூ.12 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. இது வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு அதிகம்’ என்றார்.

Next Story