மாவட்ட செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி + "||" + Larry collides with a teenager

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி
சுரண்டை அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்.
சுரண்டை, மே:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகையா. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சகுந்தலா தேவி (30), தென்காசி மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த ஓராண்டாக சங்கரன்கோவிலில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று மாலையில் முத்துகுமார் தனது மனைவியை அழைத்து வருவதற்காக சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சுரண்டை அருகே குலையநேரி பெரிய குளக்கரையில் சென்றபோது, எதிரே மணல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துகுமாருக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்த அருணாசலம் மகன் சுப்பிரமணியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாகனம் மோதி வாலிபர் சாவு
வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
2. லாரி மோதி வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்
லாரி மோதி வாலிபர் பலியானார்.
3. சுரண்டை அருகே கார்-லாரி மோதல்; வாலிபர் பலி
சுரண்டை அருகே கார்-லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.
4. காவேரிப்பாக்கம் அருகே; வாகனம் மோதி வாலிபர் பலி
காவேரிப்பாக்கம் அருகே வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
5. கோவில்பட்டியில் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
கோவில்பட்டியில் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.