தொடர்ந்து மணல் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மண்ணச்சநல்லூர் அருகே தொடர்ந்து மணல் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சமயபுரம், மே.2-
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூரை சேர்ந்தவர் திலகன் என்ற மணி (வயது 21). இவர் மணல் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இவர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாலும், வாத்தலை, மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையங்களில் மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதாலும் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் திலகன் என்ற மணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள திலகனிடம் அதற்கான உத்தரவு நகலை மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story