மாவட்ட செய்திகள்

திருச்சியில் புதிதாக 528 பேர் பாதிப்பு; கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி + "||" + 528 new people have been affected. 5 people have been killed in a single day.

திருச்சியில் புதிதாக 528 பேர் பாதிப்பு; கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி

திருச்சியில் புதிதாக 528 பேர் பாதிப்பு; கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி
புதிதாக 528 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
திருச்சி, 
திருச்சியில் புதிதாக 528 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
ஒரே நாளில் 5 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் தினசரி 400-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று உச்சகட்ட அளவாக 528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 280 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 3,061 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 897 ஆக உள்ளது. மேலும், திருச்சியில் நேற்று கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.
ஊழியர்களுக்கு தொற்று
இந்தநிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி திருச்சியில் வாக்கு எண்ணும் மையங்களில் இன்று பணியாற்ற இருந்த ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மொத்தம் 1,430 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 5 பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதில் வேறு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.