மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு + "||" + Recovery of a peacock that fell into a well

கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு
வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்கப்பட்டது.
வாசுதேவநல்லூர், மே:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் (போக்குவரத்து) செல்வமுருகேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர். பின்னர் அதை வாசுதேவநல்லூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.