2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று: ஈரோடு மகப்பேறு மருத்துவமனை 3-வது முறையாக மூடல்


2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று: ஈரோடு மகப்பேறு மருத்துவமனை 3-வது முறையாக மூடல்
x
தினத்தந்தி 1 May 2021 9:38 PM GMT (Updated: 1 May 2021 9:38 PM GMT)

ஈரோடு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் 3-வது முறையாக மருத்துவமனை மூடப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் 3-வது முறையாக மருத்துவமனை மூடப்பட்டது.
மகப்பேறு மருத்துவமனை
ஈரோடு காந்திஜி ரோட்டில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் கொரோனா தடுப்பூசியும், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு 3 நாள் மூடப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 25-ந் தேதி செவிலியர் உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு மருத்துவமனை மூடப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
3-வது முறையாக மூடல்
இதைத்தொடர்ந்து கடந்த 28-ந்தேதி முதல் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக மகப்பேறு மருத்துவமனை 3-வது முறையாக நேற்று முதல் மூடப்பட்டது. இந்த மருத்துவமனை மீண்டும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

Next Story