மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன + "||" + vote counting center

வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன

வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன
சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு
சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்கு எண்ணும் மையம்
ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அனுமதி
சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியின் நுழைவு வாயிலில் ேசாதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரும் அனைவரும் பரிசோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உரிய அனுமதிச்சீட்டு, அடையாள அட்டைகள் இருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை முடிவினை கேட்க வரும் அனுமதி பெற்ற கட்சி தொண்டர்கள் நுழைவுவாயிலில் நிறுத்தப்படுவார்கள். அங்கு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான பணிகள் நேற்று துரிதமாக நடந்தன.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த கம்ப்யூட்டர்கள்
திண்டுக்கல் அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு வரப்பட்டது.
2. வாக்கு எண்ணும் மையத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வேட்பாளர்கள்-முகவர்கள் வர வேண்டும்
வாக்கு எண்ணும் மையத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வேட்பாளர்கள்-முகவர்கள் வர வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
3. வாக்கு எண்ணும் மையத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வேட்பாளர்கள்-முகவர்கள் வர வேண்டும்
பெரம்பலூர் - குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வேட்பாளர்கள்- முகவர்கள் வர வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
4. கடலூர் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு
கடலூர் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. வாக்கு எண்ணும் மையம் அருகே வைக்கப்பட்ட கன்டெய்னரால் பரபரப்பு வேட்பாளர்கள் புகாரால் உடனடியாக அகற்றம்
தென்காசியில் வாக்கு எண்ணும் மையம் அருகே வைக்கப்பட்ட கன்டெய்னரால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர்கள் புகாரால் உடனடியாக அது அகற்றப்பட்டது.