இதுவரை 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


இதுவரை 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 1 May 2021 11:44 PM GMT (Updated: 1 May 2021 11:44 PM GMT)

இதுவரை 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறினார்.

கொரோனா 2-வது அலை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்கள், 2-ம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு இல்லாததால் மறு அறிவிப்பு வரும் வரை 3-ம் கட்ட தடுப்பூசி பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்துகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

7,200 கோவிஷீல்டு தடுப்பூசி

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர் என்ற விவரத்தை கொடுத்து தடுப்பூசி பெற்று செல்கின்றனர். 

நீலகிரியில் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது 7,200 கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பு இருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 வயதுக்கு மேற்பட்டோர் தாமாக முன் வரவேண்டும் என்றார்.


Next Story