மாவட்ட செய்திகள்

பிக்கிலி மலைப்பாதையில் விபத்து:அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்தது10-க்கும் மேற்பட்டோர் காயம் + "||" + accident in dharmapuri

பிக்கிலி மலைப்பாதையில் விபத்து:அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்தது10-க்கும் மேற்பட்டோர் காயம்

பிக்கிலி மலைப்பாதையில் விபத்து:அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்தது10-க்கும் மேற்பட்டோர் காயம்
பிக்கிலி மலைப்பாதையில் விபத்து: அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்தது 10-க்கும் மேற்பட்டோர் காயம்
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி மலைப்பாதையில் அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மணல் பாரம்
பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி மலைப்பாதையில் அரசு பஸ் மீது மோதிய டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் மற்றும் பயணிகள் காயமடைந்தனர். பிக்கிலி மலைப்பாதையில் பாப்பாரப்பட்டியில் இருந்து எம். சாண்ட் மணல் பாரம் ஏற்றிகொண்டு டிப்பர் லாரி சென்றது. கரிப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே பெரியூரிலிருந்து பாப்பாரப்பட்டி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அங்குள்ள 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. 
லேசான காயம்
விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து பின்னோக்கி மலைப்பாதையில் பக்கவாட்டு சுவற்றில் மோதியது. இதில் பஸ் டிரைவர் மற்றும் டிப்பர் லாரி டிரைவர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மலைப்பாதையில் குறுகலான சாலையில் ஒதுங்கி செல்வதற்கு வழி இல்லாமல் பஸ் மீது டிப்பர் லாரி மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
=====