திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத பெண் பிணம்


திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத பெண் பிணம்
x
தினத்தந்தி 2 May 2021 4:02 PM IST (Updated: 2 May 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகர் ஒண்டிகுப்பம் கபிலர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.

இது குறித்து மணவாளநகர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story