கூடுவாஞ்சேரி அருகே அண்ணன், தம்பி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது


கூடுவாஞ்சேரி அருகே அண்ணன், தம்பி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2021 5:12 PM IST (Updated: 2 May 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே அண்ணன், தமபி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த முகம்மது இஸ்மாயில் (வயது 32), முகம்மது இமாம்அலி (21), சகோதரர்களான இவர்கள் மீது கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் உள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் முகம்மது இமாம் அலி, முகம்மது இஸ்மாயில் ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

இந்த் கொலை வழக்கு சம்பந்தமாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜீ, முத்து, பொன்னையா, ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் (20), அஸ்வின் ( 19), விக்னேஷ் (23), ஆகியோரை மணிமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story