மாவட்ட செய்திகள்

சென்னை பல்லாவரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + College student commits suicide by hanging near Pallavaram, Chennai

சென்னை பல்லாவரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை பல்லாவரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை பல்லாவரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம், 

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி, காந்தி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 20). இவர், குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இவர், தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், வினோத்குமார் பள்ளியில் படிக்கும்போேத தன்னுடன் படித்த மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு நர்சிங் படித்து முடித்த அந்த பெண்ணுக்கும், வினோத்குமாருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு வினோத்குமார், பலமுறை அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் போனை எடுக்காமல் துண்டித்து விட்டார். இதில் மனமுடைந்த வினோத்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.